வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம் அதில்
ஒரு பக்கம் மட்டும்
வாழ்க்கையல்ல
ஒவ்வொரு
பக்கங்களானதே
வாழ்க்கை.
உன்
பேனாவைக் கூட
மூடிவைக்காதே
அதை திறக்கும்
வினாடிகளில் கூட
நீ
எழுத நினைத்ததை
மறந்துவிடக் கூடும்.
இந்த உலகம் உனக்கு
சிறையல்ல நீதான்
கைதியாய் வாழ்கிறாய்.
நன்றி: கவிஞர் காசியானந்தனின் கவிதைகளில் இருந்து !!!!
வாழ்க்கை என்பது ....
16 years ago

No comments:
Post a Comment