இப்படித்தான் நீ இல்லாமல்...
எல்லாமே இங்கு வெறும் கேள்வியாய்
இனிக்கும் உன் சிரிப்பை
ஒரு முறை சுவைக்கும் வரை...
இரக்கமில்லாத உன் இதழை
ஒரு முறை தண்டிக்கும் வரை...
மோகம் மறந்த உன் தாகத்தை
ஒரு முறை பருகும் வரை...
தொடுதல் மறந்த உன் தீண்டலில்
ஒரு முறை இருகும் வரை...
விரகம் மறந்த உன் வேர்வையில்
ஒரு முறை நனையும் வரை...
சுட்டு எரித்த உன் சுவாசத்தில்
ஒரு முறை எரியும் வரை...
உன் பார்வை பட்டு
ஒரு முறை நான் பக்குவம் ஆகும் வரை....
உன்னை சீண்டி விளையாடி
ஒரு முறை நான் சிந்தை தெளியும் வரை...
உன் மடிமேல் சாய்ந்து
ஒரு முறை என் மயக்கம் தீரும் வரை...
உன் மொழி அது ஒரு முறை
என் செவி கேட்கும் வரை...
நீ எனக்கு மட்டும் என்று சொல்லி
என்னை ஒருமுறை மறுமுறை....
மறுமுறை என்னை தழுவும் வரை...
என்னிடம் எல்லாமே கேள்விகள் தான்?
நீ இங்கு வரும் வரை!!!
வாழ்க்கை என்பது ....
15 years ago
No comments:
Post a Comment